தன்னை கடித்த பாம்பை பதிலுக்கு கடித்து கொன்ற சிறுமி..!
2 வயது சிறுமி தன்னை கடித்த பாம்பை பதிலுக்கு கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாம்பை கடித்துக் கொன்ற குழந்தை
துருக்கி நாட்டில் உள்ள கந்தார் கிராமத்தைச் சேர்ந்தவர் மெஹ்மத் எர்கான் இவருக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தை வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தது.
திடீரென விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பயங்கர சத்தத்துடன் அலறியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்த பக்கத்து வீட்டுக்கார்கள் குழந்தையின் வாயில் பாம்பை கடித்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் குழந்தையின் வாயில் இருந்த பாம்பை பிடிங்கி வீசியுள்ளனர். அப்போது பாம்பு எந்த அசைவும் இன்றி கிடந்துள்ளது.

இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் பாம்பை குச்சியை கொண்டு தள்ளிய போது பாம்பு இறந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் உடனடியாக சிகிச்சைகாக குழந்தையை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை
இச்சம்பம் குறித்து பேசிய குழந்தையின் தந்தை மெஹ்மத் எர்கான் தன் குழந்தை பாம்பை கையில் வைத்து விளையாடி கொண்டிருந்ததாகவும், பின்னர் பாம்பு குழந்தையை கடிக்கவே பதிலுக்கு குழந்தை பாம்பை கடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக கூறினார்.
தற்போது குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. குழந்தை விஷ தன்மையற்ற பாம்பை தான் கடித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.