அரியலூர் மாணவி உயிரிழப்பு : அறிக்கை தாக்கல் செய்தது தேசிய குழந்தைகள் நல ஆணையம்
அரியலூரை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி லாவண்யா தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி அவர் படித்து வந்தார்.
இதற்கிடையில், கடந்த மாதம் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கனம் செலுத்த முடியாமல் போனதால் விஷம் குடித்ததாகவும் மாணவி கூறும் மற்றொரு வீடியோ வெளியானது.
மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
[HE91PH
இதற்கிடையில், தனது மகளின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்ததை
தொடர்ந்து மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது மதுரை கிளை.
மேலும், அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையமும் விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில், பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் காரணம் என தேசிய குழந்தைகள் நல தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
மேலும், உரிய பதிவு இல்லாமல் செயல்பட்டதற்காக பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு மனநல ஆலோசனை மற்றும் உரிய நிவாரணம் வழங்கவும் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.