சிறுமி வன்கொடுமை செய்த 400 பேர் மீது வழக்குப்பதிவு

Abuse Child Maharastra Sexual
By Thahir Nov 19, 2021 09:44 AM GMT
Report

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் திருமணமான 16 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களில் 400க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ள அந்த சிறுமி தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப் படுத்தியதால் வீட்டை விட்டு ஓடிப்போக முயன்றுள்ளார்.

அப்போது பேருந்து நிலையத்திலிருந்து அவர் கடத்திச் செல்லப்பட்டு ஆறு மாதமாக ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளானதாக புகாரில் சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றத்துக்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.