ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கூடம் கட்டுகிறாரா நடிகர் விஜய்..! உண்மை என்ன?

School Child Open Poor Joseph Vijay sponsor
By Thahir Dec 19, 2021 10:14 PM GMT
Report

சென்னையை அடுத்து உள்ள திருப்போரூரில் ஏழை குழந்தைகள் இலவசமாக படிக்க பள்ளிக்கூடம் கட்டுகிறார் விஜய் என்று தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை.

பள்ளிக்கூடம் கட்டுவது விஜய் அல்ல மாறாக அவரின் மாமா சேவியர் பிரிட்டோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,

இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தயாரித்தவர் தான் இந்த பிரிட்டோ. அவருக்கு சொந்தமாக ஒரு பள்ளிக்கூடமும், கல்லூரியும் இருக்கிறது.

இந்நிலையில் மேலும் ஒரு பள்ளிக்கூடம் கட்டுகிறார். மாமா கட்டும் பள்ளிக்கூடத்தை விஜய் சுற்றிப் பார்க்க சென்றார்.

அதை பார்த்தவர்களோ, விஜய் தான் இலவச பள்ளிக்கூடம் கட்டுகிறார் என்று பேசத் துவங்கிவிட்டார்கள். கெரியரை பொறுத்தவரை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு டப்பிங் பேசி முடித்துவிடுவாராம். அதன் பிறகு குடும்பத்துடன் நேரம் செலிவிட்டுவிட்டு தளபதி 65 படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.

வம்சி பைடிபல்லி இயக்கும் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் 2022ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

தில் ராஜு தயாரிக்கும் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.