குழந்தைக்கு தாயான 17 வயது மாணவி: தந்தையான 16 வயது சிறுவன்- அதிர்ந்து போன பெற்றோர்

Child Pregnant Delivery
By Thahir Aug 21, 2021 06:46 AM GMT
Report

தமிழகத்தில் 17 வயது மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. திருச்சியின் முசிறியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அய்யம்பாளையம் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார், உடனடியாக அவரை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மாணவியை சோதித்த மருத்துவர்கள், இது பிரசவ வலி என கூறியுள்ளனர், இதைக் கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைய, 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்கான அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தைக்கு தாயான 17 வயது மாணவி: தந்தையான 16 வயது சிறுவன்- அதிர்ந்து போன பெற்றோர் | Child Pregnant Delivery

செல்லும் வழியிலேயே மாணவிக்கு குழந்தையும் பிறந்ததால் பெற்றோர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் பின்னர் முசிறி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திவருகின்றனர்.

விசாரணையில் தம்பி முறை கொண்ட பத்தாம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுவன் சிறுமி கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.

சிறுமியை மிரட்டி உறவு வைத்துக் கொண்டது தெரியவந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் திருச்சி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.