14 வயதில் கர்ப்பமடைவது சாதாரணமானதுதான்; மனு ஸ்மிருதி படிங்க - உயர்நீதிமன்றம் கருத்து

Gujarat Pregnancy
By Sumathi Jun 10, 2023 06:24 AM GMT
Report

சிறுமி கர்ப்பமடைந்த வழக்கில் நீதிமன்றம் கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சிறுமி கர்ப்பம்

குஜராத், உயர் நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமாகியுள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பினியாக உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரசவம் நடக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

14 வயதில் கர்ப்பமடைவது சாதாரணமானதுதான்; மனு ஸ்மிருதி படிங்க - உயர்நீதிமன்றம் கருத்து | Child Pregnant Before Age Of 17 Says Gujarat Hc

எனவே, கருவை கலைக்க அனுமதி வேண்டும் என சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதனை விசாரித்த நீதிபதி சமீர் ஜேஜ தவே, "நாம் இப்போது 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆனால், உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது பாட்டியைக் கேட்டு பாருங்கள்.

சர்ச்சை கருத்து

அந்த காலத்தில் திருமணம் நடைபெறும் அதிகபட்ச வயதே 14 அல்லது 15ஆக இருக்கும். 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். எனவே, 4 அல்லது 5 மாதம் எல்லாம் பெரிய மாற்றத்தை கொண்டுவராது. நீங்கள் மனுஸ்மிருதியை ஒருமுறை படித்து பாருங்கள்" எனத் தெரிவித்தார்.

14 வயதில் கர்ப்பமடைவது சாதாரணமானதுதான்; மனு ஸ்மிருதி படிங்க - உயர்நீதிமன்றம் கருத்து | Child Pregnant Before Age Of 17 Says Gujarat Hc

அத்துடன் சுமார் 7 மாதங்கள் தாண்டிவிட்டதால் கருவை கலைக்க முடியமா என மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்திடம் அறிக்கை தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதை விட முட்டாள் தனம் இருக்க முடியுமா என கண்டனம் தெரிவித்துள்ளார்.