சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது!
ஒசூர் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார்.இருந்ததையறிந்து அதிர்ச்சியடைந்த அச்சிசிறுமியின் தாய், சிறுமியிடம் விசாரித்துள்ளார்.அப்போது சித்தப்பா முறை கொண்ட கேசவன் தான் சிறுமிக்கு ஆசை வார்த்தக்கூறி கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
சிறுமியின் அம்மா,அப்பா ஆகியோர் கேசவனிடம் கேட்க சென்றபோது அவரின் உறவினர்கள் சிறுமியின் பெற்றோரை தாக்கி உள்ளனர்.. இதனைதொடர்ந்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கேசவன் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சிறுமியின் பெற்றோரை தாக்கிய பச்சமுத்து,கிருஷ்ணன்,வாசு,ஆனந்த்,பச்சையப்பன்,மாதப்பா,அழகேசன் ஆகிய 7 பேரும், கேசவன் என 8 பேரை கைது செய்து போலிசார் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.