குழந்தையின் கழுத்தை அறுத்த தந்தை - தன் ஜாடையில் இல்லை என்று வெறிச்செயல் !
பார்ப்பதற்கு தனது ஜாடையில் இல்லை என்று கூறி பிறந்த குழந்தையை தந்தை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை வெறிச்செயல்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தேவிச்செட்டி குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் தாம்பரம் இந்திய விமானப்படையில் பிரிவில் உணவு பரிமாறும் பனி செய்து வருகிறார். இவருக்கு ஹேமலதா (22) என்ற மனைவி உள்ளார்.
இவர் தலை பிரசவம் என்பதால் கர்ப்பமான மூன்றாவது மாதம் முதல் ரெட்டியூரிலுள்ள தனது அம்மா வீட்டில் தங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 26 நாட்களுக்கு முன் இந்த தம்பதிக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி மணிகண்டன் குழந்தையைப் பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
குழந்தையைப் பார்த்த அவர் குழந்தையின் ஜாடை தன்னைப் போல இல்லை, இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று ஹேமலதாவிடம் பெரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
பின்னர் பிளேட் ஒன்றை எடுத்து குழந்தையின் கை மற்றும் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை உறவினர்கள் அணைக்கட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கைது
இது குறித்து அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.