தயவு செய்து உதவிடுங்கள்..பச்சிளம் உயிரை காப்பாற்ற - விஜய் சேதுபதி உருக்கம்
தஞ்சாவூரை சேர்ந்த பாரதி என்கிற குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் உள்ளது. இது ஒரு அரிய வகை நோய் என்பதால், அந்த நோய்க்கு இரண்டு வயதிற்குள் ஊசி போட வேண்டும்.
தற்போது அந்த குழந்தை பிறந்து 21 மாதம் ஆகிவிட்டது. இதனால் உடனடியாக அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இதற்கு அளிக்கப்படும் அந்த சிகிச்சை ஊசியின் விலை 16 கோடி ரூபாய் ஆகும், அந்த அளவுக்கு பணம் செலவு செய்யும் அளவுக்கு பாரதியின் பெற்றோரின் நிதி நிலை இல்லை என்பதால் தங்கள் மகளை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ், அறந்தாங்கி நிஷா, செந்தில், ராஜலட்சுமி, ரியோ ராஜ் உள்ளிட்டோர் பாரதிக்கு உதவி செய்யுமாறு பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். குழந்தை பாரதிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரமும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை பாரதிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் பணம் அனுப்ப வேண்டிய கூகுள் பே, போன் பே எண்ணும் கொடுத்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் ட்வீட்டை பார்த்தவர்கள் பாரதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
— VijaySethupathi (@VijaySethuOffl) September 27, 2021