கழுத்தில் தாலியுடன் வந்த 9ஆம் வகுப்பு மாணவி - அதிர்ந்த ஆசிரியர்கள்
9ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து வைத்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாலியுடன் வந்த மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது அங்குள்ள பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று(11.02.2025) இந்த மாணவி கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்ததை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக ஆசிரியர்கள் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் சமூக நலத் துறை அலுவலர்கள் சம்மந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
வழக்குப்பதிவு
விசாரணையில், நேற்று முன்தினம்(10.02.2025) இந்த மாணவிக்கும், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் அப்பகுதியில் உள்ள கோயிலில், பெற்றோர்கள் திருமணம் நடத்தி வைத்தது தெரிய வந்துள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், திருமணம் செய்துகொண்ட இளைஞர், அவர்களின் பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.