குழந்தை திருமணம் : சிதம்பரம் தீட்சிதர்கள் கைது
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் வைக்கப்பட்டது. கடந்த வருடம் தனது மகளுக்கு 17 வயதே இருக்கும் போது குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளார்.
குழந்தை திருமணம்
சட்டப்படி இது குற்றம் என்று தெரிந்தும் அவர் திருமணம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையில், 17 வயது சிறுமிக்கு இவர்கள் திருமணம் செய்து வைத்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பான ஆதாரங்களை சமூக நலத்துறை வெளியிட்டது. இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையிலும் குழந்தை திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டார்.
தீட்சிதர்களுக்கு சிறை
சிறுமியை திருமணம் செய்த ராஜரத்தின தீட்சிதர் கைது செய்யப்பட்டார். அதேபோல் திருமணத்தை நடத்தி வைத்த வெங்கடேஸ்வரா தீட்சிதர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் குழந்தை திருமணம் விவகாரத்தில் கைதான ஹேமசபேச தீட்சிதர், விஜயபாலன் தீட்சிதர் ஆகியோருக்கு அக்டோபர் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சிதம்பரம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.