கடலுாரில் பள்ளி வேன் மோதி 3 வயது சிறுவன் பரிதாப பலி - பெற்றோர் கதறல்
கடலுார் அருகே பள்ளி வேன் மோதியதில் 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வேன் மோதி சிறுவன் உயிரிழப்பு
கடலுார் மாவட்டம் மேற்கு ராமபுரம் கிராமத்தில் 3 வயது சிறுவனபன தேஜேஸ்வரன் சாலையை கடக்க முயன்ற போது பள்ளி வேன் மோதியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே தேஜேஸ்வரன் என்ற 3 வயது சிறுவன் உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய வேன் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்திய வேனை போலீசார் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வேன் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.