300 அடி ஆழ்துளை கிணற்றில் குழந்தை - கண்ணீரோடு காத்திருக்கும் பெற்றோர்
மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் பெண் குழந்தை தவறி விழுந்த நிலையில் மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆழ்துளை கிணற்றில் பெண் குழந்தை
மத்திய பிரதேசத்தின் மாநிலம் செஹோர் மாவட்டம் முங்காலி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2.5 வயது பெண் குழந்தை அருகில் இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
இதையடுத்து குழந்தை விழுந்தது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். தற்போது குழந்தை 300 அடி ஆழத்தில் உள்ளதால் குழந்தையை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.
மீட்பு பணிகள் தீவிரம்
ஆழ்துளை கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டப்பட்டு குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் குழந்தையை பாதுகாப்பாக விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்று கண்ணீரோடு காத்துக்கிடக்கின்றனர்.