வழிமாறி தவறி வந்த குட்டி ஆட்டை தாயிடம் சேர்த்து வைத்த குழந்தை - வைரலாகும் வீடியோ...!

Viral Video
By Nandhini Dec 31, 2022 08:49 AM GMT
Report

குட்டி ஆட்டை தாயிடம் சேர்த்து வைத்த குழந்தை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு குட்டி ஆடு தன் தாயை பிரிந்து வழித் தவறி வந்துவிட்டது. தாயை தேடி குட்டி ஆடு தவித்துக்கொண்டிருக்கும்போது, தாய் ஆடு தன் குட்டியை தேடிக்கொண்டு வந்தது.

அப்போது, ஒரு குழந்தை தாய் ஆடு தேடி வருவதைப் பார்த்தவுடன், குட்டி ஆட்டிடம் சென்று... அங்கே.. பாரு... உன் அம்மா வராங்க... அதோ அங்கேதான் வா.. வா... நான் உன்னை கூட்டிக்கொண்டு போகிறேன் என்று தன் மழலைக் குரலில் அந்த குழந்தை, குட்டி ஆட்டிடம் கூறுகிறது. அந்த குட்டி ஆட்டை கூட்டிக்கொண்டு தேடி ஓடிவந்த தாயிடம் அக்குழந்தை சேர்த்து வைக்கிறது.

தற்போது, இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே... என்ன ஒரு அழகு.. இந்த குழந்தையின் செயல் எங்கள் இதயத்தை கொள்ளையடிக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

child-holding-baby-goat-mother-viral-video