கிணற்றில் தவறி விழுந்த சிறுமி - துணிச்சலாக காப்பாற்றிய 8 வயது சிறுவன்
திருச்சியில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை 8 வயது சிறுவன் குதித்து காப்பாற்றிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுனர் பாலகிருஷ்ணன் என்பவர் விருதுநகரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இதனிடையே மனைவி குணா மற்றும் தனது குழந்தைகள் லித்திகா மற்றும் நிதர்சன் ஆகியோருடன் அப்பகுதியில் புதன்கிழமை மாலை விறகு வெட்டும் பணியில் அவரு ஈடுபட்டு இருந்துள்ளார். பின்னர் அருகில் இருந்த கிணற்றில் குளிக்க சென்ற நிலையில் சிறுமி லித்திகா கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளார்.
இதனைக்கண்ட அருகில் இருந்த 8 வயது சிறுவன் லோஹித் சற்றும் தாமதிக்காமல் தண்ணீரில் குதித்து லித்திகாவை மீட்டெடுத்துள்ளான். அதே சமயம் குணாவை காப்பாற்ற தண்ணீரில் குதித்த மற்றொரு சிறுவனையும் காப்பாற்றிய லோஹித் குணாவை கரைக்கு இழுத்து வர முடியவில்லையாம்.
இதனால் குணா நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்
துலுக்கம்பட்டி அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் லோஹித்தை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேரில் அழைத்து ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.