தூத்துக்குடியில் அதிர்ச்சி... காதலிப்பதாக கூறி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த இளைஞர்
தூத்துக்குடி அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்கி அசாம் மாநிலத்தின் மங்கட்டாய் மாவட்டத்தை சேர்ந்த அலிமுதீன் என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள 17 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார்.
இதனையடுத்து அச்சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அலிமுதீன் அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தன் தாயிடம் தெரிவிக்க, அவர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட ஆய்வாளர் நாககுமாரி சிறுமியிடம் தீவிர விசாரணை செய்தனர்.
இதில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அலிமுதீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆட்கடத்தல், பாலியல் தொல்லை உள்ளிட்ட புகாரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பின்னர் அலிமுதீன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.