3 மாத குழந்தையை துரத்தி துரத்தி கடித்த நாகம் - கதறி துடித்த தாய்..!
பிறந்து மூன்றே மாதங்களான குழந்தையை நாகப்பாம்பு கடிதத்தில் குழந்தை இறந்த சம்பவம் வேலூர் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடித்த நாகப்பாம்பு
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரை சேர்ந்தவர் கன்னியப்பன் - செல்வி தம்பதி. ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஆண்குழந்தை பிறந்துள்ளது. பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருந்த நிலையில், அதே பகுதியில் குடிசை வீட்டில் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். வீட்டில் குழந்தையுடன் செல்வி உறங்கி கொண்டிருந்த நிலையில், வீட்டில் புகுந்த நாகப்பாம்பு குழ்நதையை கடித்துள்ளது.
குழந்தை மரணம்
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு விழித்து கொண்ட செல்வி, பாம்பை பிடித்து உதறி தள்ளி, குழந்தையை ஒடுக்கத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
3 மாதமே ஆனா குழந்தை உயிரிழந்த நிலையில், குழந்தையின் துணியை வைத்து கொண்டு தாய் செல்வி அழும் காட்சி அப்பகுதி மக்களை கலங்கவைத்துள்ளது.