மூச்சுக்குழாயில் புகுந்த வண்டு - மூச்சுத் திணறி இறந்த குழந்தை!
குழந்தை மூச்சுக்குழாயில் வண்டு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வண்டு கடி
திருவள்ளூர், சக்தி நகரைச் சேர்ந்தவர் குகஸ்ரீ (1). இவர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தரையில் கிடந்த ஒரு வண்டை எடுத்து விழுங்கியதாக தெரிகிறது.
வண்டு குழந்தையின் மூச்சுக்குழாய்க்குள் சென்று கடித்ததால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே பெற்றோர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தை பலி
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.