போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை திடீர் மரணம்

Cuddalore
By Fathima Jun 29, 2026 04:52 AM GMT
Report

கடலூரில் நேற்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

கடலூரின் நல்லாத்தூரை சேர்ந்தவர் ராஜி(வயது 27), டிரைவாக பணிபுரிந்து வருகிறார், இவரது மனைவி ராஜம், இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.

நேற்று போலியோ சொட்டு மருந்து முகாமுக்கு சென்று குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்துவிட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார், குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு உறங்க வைத்துள்ளார்.

மதியம் பார்க்கும் போது குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளது, உடனடியாக அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர், ஆனால் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர், குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு அறிக்கைக்கு பின்னரே காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை திடீர் மரணம் | Child Dies After Given Polio Drops