தாய்மார்களே உஷார்..! ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட குழந்தைக்கு நேர்ந்த சோகம் - கதறும் தாய்!
ஜெல்லி மிட்டாயை சாப்பிட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெல்லி மிட்டாய்
தேனி மாவட்டம் சருத்துப்பட்டி பகுதியை சேர்நதவர் மலர்நிகா (21). இவருக்கு ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது. மலர்நிகா தனது குழந்தை ஹர்ஷனுக்கு ஜெல்லி மிட்டாய் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த குழந்தை ஜெல்லி மிட்டாயை சாப்பிட்ட நிலையில், திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் மலர்நிகா அலறியடித்துக்கொண்டு குழந்தையை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், குழந்தையின் உணவுக் குழாய்க்குள் மிட்டாய் சிக்கிக் கொண்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தை உயிரிழப்பு
தனது குழந்தை உயிரிழந்ததை நம்பமுடியாத மலர்நிகா கதறி அழுதார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெல்லி மிட்டாயை சாப்பிட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஜெல்லி மிட்டாய்களை குழந்தைகளுக்குக் கொடுப்பது சரியானது இல்லை. அவை எளிதாக ஒட்டிக் கொள்ளும் சிக்கல் இருப்பதால், அது போன்ற மிட்டாய்களை தாய்மார்களும் சரி, யாராக இருந்தாலும் குழந்தைகளுக்குத் தராமல் இருப்பது சரியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு 5 வயதாகும் வரை இது போன்ற ஒட்டும் மிட்டாய்களை தர வேண்டாம். அதிலும் குறிப்பாக ஜெல்லி போன்றவற்றைக் கட்டாயம் குழந்தைகளுக்குத் தர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.