2 சிறுவர்களின் வங்கிக் கணக்குகளில் 900 கோடிக்கு மேல் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி அதிகாரிகள்

Child Bank Shocking Deposit
By Thahir Sep 16, 2021 05:47 AM GMT
Report

பீகாரில் உள்ள பள்ளி சிறுவர்களின் வங்கிக் கணக்குகள் பெரும் தொகையைப் பெற்ற சம்பவம்,அது அவர்களின் குடும்பங்களை மட்டுமல்ல, முழு கிராமத்தையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்று லைவ்ஹிந்துஸ்தான் செய்தி இதழ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பீகார்,கதிஹார் மாவட்டத்தில் உள்ள பாகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தில் வசிக்கும் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அசித் குமார் ஆகிய சிறுவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட தொகை ரூ. 900 கோடிக்கு மேல் இருக்கும் என்று லைவ்ஹிந்துஸ்தான் தெரிவித்துள்ளது.

2 சிறுவர்களின் வங்கிக் கணக்குகளில் 900 கோடிக்கு மேல் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி அதிகாரிகள் | Child Deposit Bank Shocking

சிறுவர்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) உள்ளூர் மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையத்திற்கு (CPC) சென்று, அரசு சீருடைகளுக்காக மாநில அரசால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைப் பற்றி அறிந்து கொள்ள முயன்றபோது,தங்களது வங்கிக் கணக்கில் பெரும் தொகை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுவர்கள் உத்தர பீகார் கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள். விஸ்வாஸின் கணக்கில் ரூ. 60 கோடியும், ​​குமாரின் கணக்கில் திடீரென ரூ. 900 கோடியும் இருந்தது என்று லைவ்ஹிந்துஸ்தான் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,கிளை மேலாளர் மனோஜ் குப்தா இந்த விவகாரத்தை அறிந்து ஆச்சரியப்பட்டு பணம் எடுப்பதை நிறுத்தினார்.அதன்பின்னர்,ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.