காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் - அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு
திருப்பூரில் உள்ள காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சிறுவர்கள் உயிரிழப்பு - அமைச்சர் ஆய்வு
திருப்பூர் அவினாசி ரோடு திருமுருகன்பூண்டி அருகில் விவேகானந்தா ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கியுள்ளனர்.
இந்த காப்பகத்தில் நேற்று காலை வழக்கம் போல் உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது காலை வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட சிறுவர்கள் தீடீரென மயக்கம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் விசாரணையில் சிறுவர்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து காப்பகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.