குழந்தைகள் பராமரிப்பு சென்டரில் துப்பாக்கிச் சூடு - 38 பேர் உயிரிழப்பு

Thailand Death
By Thahir Oct 06, 2022 08:23 AM GMT
Report

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு சென்டரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பெரியவர்கள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

38 பேர் உயிரிழப்பு 

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பகல்நேர பராமரிப்பு சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் காலை முதல் மாலை வரை பராமரிக்கப்பட்டு வந்தது.

இன்று வழக்கம் போல் பெற்றோர் தங்களது குழந்தைகளை பராமரிப்பு சென்டரில் விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கு வந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சராமரியாக சுட்டுள்ளார்.

குழந்தைகள் பராமரிப்பு சென்டரில் துப்பாக்கிச் சூடு - 38 பேர் உயிரிழப்பு | Child Care Center Shooting 38 Dead

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் 36 குழந்தைகளும், 2 பெரியவர்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா குற்றவாளியை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.