2 இதயம் 4 கால்களுடன் பிறந்த விசித்திர குழந்தை - டாக்டர்கள் ஆச்சர்யம்!

Rajasthan
By Sumathi Mar 07, 2023 11:10 AM GMT
Report

இரு இருதயம், நான்கு கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது.

 அதிசய குழந்தை

ராஜஸ்தான், கங்காராம் தனியார் மருத்துவமனையில் 19 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் கைலாஷ் சோங்காரா சோனோகிராபி செய்தார்.

2 இதயம் 4 கால்களுடன் பிறந்த விசித்திர குழந்தை - டாக்டர்கள் ஆச்சர்யம்! | Child Born With Two Hearts And 4 Legs In Rajasthan

அந்த சமயத்தில் கர்ப்பிணியின் வயிற்றில் விசித்திரமான குழந்தை இருப்பது தெரியவந்தது. அதில், அந்த குழந்தைக்கு இரண்டு இதய துடிப்புகள் இருப்பதாக உணரப்பட்டது. அதன் பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1 மணி நேரத்தில் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை இறப்பு

ஆனால், அந்த குழந்தைக்கு இரு இதயமும், நான்கு கால்களும் இருந்துள்ளது. ஆனால், பிரசவத்திற்குப் பின் சுமார் 20 நிமிடங்கள் அந்த குழந்தை உயிரோடு இருந்ததாகவும், அதன் பின்னர் இறந்து விட்டதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த வகை பிரசவமானது, கான்ஜூனோகல் அனோமலி என அழைக்கப்படுகிறது.