15 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை விசாரணையில் அம்பலம்!

Child Baby Birth
By Thahir Jul 19, 2021 07:25 AM GMT
Report

பொள்ளாச்சியில் வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் சிறுமியின் தாயாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

15 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை விசாரணையில் அம்பலம்! | Child Baby

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளார். இச்சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அச்சமடைந்த தாய் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும், சிறுமிக்கு ஏற்பட்டிருப்பது பிரசவ வலி என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி மகளிர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் வீட்டுக்கு அருகே வசித்து வரும் குருசாமி(49) என்னும் மாற்றுத்திறனாளி சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குருசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

சிறு வயதிலேயே குழந்தையை ஈன்றெடுத்த சிறுமியையும் அந்த குழந்தையும் காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.