பெண் வேடமணிந்து குழந்தை கடத்தல்: தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்
இராமநாதபுரத்தில் பெண் வேடமிட்டு குழந்தை கடத்த திட்டமிட்ட நபர்களுக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் சிங்கனேந்தல் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பிச்சைக்கார தம்பதியரைப் போல இருவர் சுற்றித்திரிந்துள்ளனர்.
இவர்களை அவ்வப்போது லோடு ஆட்டோ சுற்றி வருவதை, ச பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அந்த பெண்ணிடம் விசாரணை மேர்க்கொண்டுள்ளனர்.
அந்த பெண் ஹிந்தியில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார் அந்த பெண்ணிடம் விசாரிப்பதை பார்த்த டெம்போ ஓட்டுனர் தப்பியோடியுள்ளான். உடனடியா அந்த பெண்ணோடு இருந்த நபரையும் மடக்கிபிடித்த அப்பகுதி இளைஞர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
அப்போது அந்த கிராமத்தினர் நடத்திய விசாரனையில்,தாங்கள் குழந்தை திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும் பெண் வேடமணிந்து யாருக்கும் சந்தேகம் வராமல் பிச்சை எடுப்பது போல சுற்றி திரிந்து தங்களுக்கு சாதகமான சூழல் அமையும் பட்சத்தில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்றுவிடுவதாகவும் இதற்காக ஒரு லட்சம் தருவார்கள் என கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப் பகுதிமக்கள் உடனடியாக தேவிபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண் பெண் வேடமணிந்து பிச்சைக்கார தம்பதியரைப் போல நோட்டமிட்டு குழந்தை கடத்தலில் ஈடுபட முயன்ற சம்பவம் இராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.