நிலக்கரி இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் மின்வெட்டு தொடங்கியுள்ளது இது குறித்து அதிமுக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வரும் மின்சாரம் குறைக்கப்பட்டது.
மத்திய தொகுப்பில் கிடைக்க வேண்டிய மின்சாரம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக குறிப்பாக ஒரே நாளில் 796 மெகாவாட் அளவுக்கு தடை ஏற்பட்டது என்றார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
பாரதீப்,விசாகப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து நாள் ஒன்று 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தடை இல்லா மின் வினியோகத்தை தொடர இந்த நடவடிக்கை அவசியம் என்றும் தான் எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.