நான் முதல்வர் ஆனாலும் உங்களில் ஒருவனாக தான் இருப்பேன் - முக ஸ்டாலின்
people
election
admk
dmk
By Jon
சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று, முதலமைச்சர் ஆனாலும், எப்போதும்,மக்களில் ஒருவர் தான் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில், பயனாளிகளுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடற்பயிற்சி கூடம், சலவை மேடை, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை திறந்துவைத்தார்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் கணினி பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார். திமுக ஆட்சி அமைந்ததும், கொளத்தூர் மட்டுமின்றி, அனைத்துத் தொகுதிகளிலும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.