நவராத்திரி விழாவில் பங்கேற்க இருந்த விஜயின் பயணம் ரத்து!
கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறவிருந்த நவராத்திரி விழாவில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார்.
கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1.98 இலட்சம் சதுர அடி பரப்பளவில் ஏழு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகத்தை’ அவர் இன்று திறந்துவைத்தார்.

பயணம் ரத்து
இதனைத் தொடர்ந்து, பிரபல நகைக்கடை உரிமையாளர் ஏற்பாடு செய்திருந்த நவராத்திரி விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் கேரளம் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும், கோவை மற்றும் கேரளத்தில் பெய்துவரும் கனமழையால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவையிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.