புதிய வாகனத்தில் டிரைவராக அமர்ந்த தமிழக முதல்வர்!
முதல்வராக பொறுப்பேற்ற விஜய் அடுத்தடுத்து பல அதிரடியான விடயங்களை செய்து வருவது மக்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக முதல்வர்
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், விஜய் முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.
தன்னுடன் பணியாற்றுவதற்கு அமைச்சர்களை தெரிவு செய்து அவர்களை அவர்களது இருக்கையிலேயே அழைத்து சென்று அமர வைத்துள்ளார்.

பல தடைகளை தாண்டி அரசியலுக்கு வந்துள்ள விஜய், பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். இதில் இன்று செய்த காரியம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

புதிய வாகனத்தை இயக்கிய விஜய்
அதாவது ஊரக நலப்பணிகள் இயக்கத்திற்காக 2 கோடியே 90 லட்சம் மதிப்பில் 40 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த சேவையினை தொடங்கி வைத்துள்ள விஜய் ஒரு காரில் தானே டிரைவராக இருந்துள்ளார்.
ஆம் பொலிரோ வாகனத்தில் ஏறி முதலில் சீட் பெல்டை அணிந்து கொண்டு சிறிது தூரம் வாகனத்தை ஓட்டி தலைமைச் செயலகத்தில் வலம் வந்துள்ளார்.
தலைவர் விஜய்யின் இந்த செயல் பாமர மக்கள், ரசிகர்கள், வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

