பெருந்துறையில் ரூ.1100 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர்
CM to visit perundurai today to distribute welfare assistance- தமிழக முதலமைச்சர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.1,100 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
பெருந்துறை வரும் முதல்வர்
தமிழக முதல்வர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இந்த விழா காஞ்சிக்கோவில் பிரிவு அருகே உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண தில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் சுமார் 5,000 பேருக்கு வங்கிக் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்க உள்ளார்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் முடிவடைந்த வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், ம. விஜய்பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதல்வர், அங்கிருந்து சாலை வழியாக பெருந்துறைக்கு வருகிறார்.
முதல்வரின் வருகையையொட்டி, பெருந்துறையில் சாலையின் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுங்கச்சாவடி, சிப்காட், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், குன்னத்தூர் நான்கு சாலை, அண்ணா சிலை வழியாக முதல்வர் செல்கிறார்.
மேலும், முதல்வா் வருகையையொட்டி, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பற்றவைக்கப்பட்ட பார்பிக்யூ க்ரில்: உயிரைப் பறித்த நச்சு வாயு: நுவரெலியாவில் கணவன் - மனைவி உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan