ஜிம்மில் ஜம்முனு வொர்க் அவுட் செய்யும் முதல்வர் ஸ்டாலின்.. வைரலாகும் வீடியோ!

viral mkstalin gymvideo
By Irumporai Jun 28, 2021 05:30 PM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வமுடையவர். பரபரப்பான அரசியல் மற்றும் தேர்தலுக்கு மத்தியிலும் அவர் வாரத்தில் ஒரு சில நாட்கள் உடற்பயிற்சி செய்வதையும் சைக்கிளிங் செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போதுகூட பல்வேறு கிராமங்களுக்கு நடைப்பயிற்சி செய்து மக்களை சந்தித்தார். 

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

அதில் சிவப்பு நிற டீசர்ட் அணிந்துள்ள ஸ்டாலின், ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிறார். 68 வயதான போதிலும் உடற்பயிற்சி செய்து வருவதாலேயே இன்னும் இளமையாக இருப்பதாக இணைய வாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.