10 ஆண்டுகளுக்கு பிறகு சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

cmstalin periyarmemoriyalopen சமத்துவபுரம்
By Irumporai Apr 05, 2022 04:01 AM GMT
Report

10 ஆண்டுகளுக்கு பிறகு பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொழுவாரி கிராமத்தில் ரூ.3 கோடியில் 100 வீடுகளுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று முன்னர் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து,பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் சமத்துவபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டார்.

இதனிடையே,சமத்துவபுரத்தில் கலைஞர் பூங்கா,விளையாட்டு திடல் உள்ளிட்டவைகளை திறந்து வைத்த முதல்வர் வாலிபால் விளையாடினார்.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக திறக்கப்பட்டுள்ள சமத்துவப்புரத்தில் ரேசன் கடையும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.