தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் 'பட்ஜெட்' - மு.க.ஸ்டாலின்!

M K Stalin Thangam Thennarasu Budget 2025
By Vidhya Senthil Mar 15, 2025 02:36 AM GMT
Report

 தமிழகத்தின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது பட்ஜெட்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

 பட்ஜெட்

தமிழக அரசின் பட்ஜெட் சிறப்பம்சங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம், இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம், தமிழகமெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும்

தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம்

தொழிற்பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என நவீனத் தமிழகத்தை உருவாக்கும் முன்முயற்சிகள். விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டுள்ளன.

‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழகத்தின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக பட்ஜெட். அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.