"நான் சொல்வதை எல்லாம் அப்படியே செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி" - மு.க.ஸ்டாலின்

leader admk dmk
By Jon Feb 09, 2021 01:40 PM GMT
Report

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அறிவிப்புக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் சுயநலத்துக்காக ரத்து செய்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”ஒரு அறிவிப்பை பழனிசாமி செய்திருக்கிறார். அதாவது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார். கூட்டுறவுக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சொன்ன போது ரத்து செய்யாத பழனிசாமி - கூட்டுறவுக் கடனை ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் சொன்னபோது ரத்து செய்யாத பழனிசாமி - ரத்து செய்ய மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் சென்று வாதிட்ட பழனிசாமி - இன்று ரத்து செய்ய என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்வோம் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதனால் வேறு வழியில்லாமல் ரத்து செய்துள்ளார் பழனிசாமி. விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காக அவர் ரத்து செய்யவில்லை. தேர்தல் சுயநலத்துக்காக ரத்து செய்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.திமுக எதைச் சொல்கிறதோ, இந்த ஸ்டாலின் என்ன சொல்கிறானோ அதை பழனிசாமி அப்படியே செய்து கொண்டு வருகிறார்!