தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் ஆட்சியில் உள்ளனர் : கொந்தளித்த ஈபிஎஸ்
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
எடப்பாடிபழனிச்சாமி ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்ட கூட்ட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கினார், அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஈபிஎஸ்
பொம்மை முதல்வர்
தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் உள்ளதாக கூறிய பழனிச்சாமி முதலமைச்சர் ஸ்டாலின் பொம்மை முதல்வராகவே உள்ளதாக கூறினார்.

மேலும் திமுக அரசு பொறுப்பு ஏற்ற நாள் முதல் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை என்று கூறிய ஈபிஎஸ் திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
#Live
— AIADMK (@AIADMKOfficial) September 16, 2022
மின் கட்டண உயர்வை கண்டித்து மாண்புமிகு கழக இடைக்கால பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் https://t.co/TXXHKbV6dN
மக்களை ஏமாற்றும் திமுக அரசு
திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று குற்றம் சாட்டினார், மேலும் வசூல் மன்னராக இருக்கிறார் நமது முதலமைச்சர்,தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக கூறினார்.