அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று கூறியது பற்றி முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் - அண்ணாமலை
V. Senthil Balaji
BJP
K. Annamalai
By Thahir
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
- போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது கையூட்டு பெற்றுக்கொண்டு பணி நியமனங்களை வழங்கியதால் தான் நடவடிக்கை.

- செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது 2019 ல் போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
- நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- செந்தில் பாலாஜியை தப்பிக்கவைக்க அரசு தரப்பில் முயன்றதால் தான் உச்சநீதிமன்றம்
- மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் பண பரிவர்த்தனை செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார் உள்ளதால் தான் அமலாக்கத்துறை விசாரணை
- அமலாக்கத்துறை முறைப்படி நடத்திய சோதனை எந்த வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி?
- அரசியல் காழ்ப்புணர்ச்சி என கூறியது பற்றி முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
- 2016 ல் குளித்தலையில் செந்தில் பாலாஜி மீது புகார்களை கூறி முதலமைச்சர் பேசியுள்ளார்.
- அமலாக்கத்துறை மத்திய அரசின் கீழ் இருந்தாலும் அதற்கென தனி அதிகாரிகள் உள்ளனர்.
- உரிய சான்று இருப்பதால் தான் அமலாக்கத்துறை அமைச்சரின் சோதனை நடத்தியது.
- முதலமைச்சர் சட்டத்தை மதிப்பவர் என்றால் அமலாக்கத்துறைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
- முதலமைச்சர் சட்டத்தை மதிப்பவர் என்றால் அமலாக்கத்துறைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
- அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.