இந்தி திணிப்பு ஆதாரமற்ற பொய்…முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும் - அண்ணாமலை
திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தோல்வி. மத்திய அரசு எங்கும் இந்தியை கட்டாய மொழியாக மாற்றவில்லை. அதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தான் அளிக்க வேண்டும். புதிய கல்வி கொள்கை என்பது மும்மொழி கல்வி கொள்கையே என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்
இன்று திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் இந்தி எதிர்ப்பு மற்றும் பொதுவான நுழைவு தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், ‘ திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் படு தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசு எங்கும் இந்தியை கட்டாய மொழியாக மாற்றவில்லை. அதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தான் அளிக்க வேண்டும். ‘ என பேசினார்.
மேலும், ‘ திமுக மீது மக்களுக்கு எதிர்ப்பு வந்தால், அவர்கள் இந்தி எதிர்ப்பு பற்றி பேசுவார். புதிய கல்வி கொள்கை என்பது மும்மொழி கல்வி கொள்கையே தவிர, இந்தி கட்டாயம் என்பதில்லை.
திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் கூட தமிழ் மொழி கட்டாயமில்லை. ‘ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.