மதுரை ஆட்டோ ஓட்டுநரை பாராட்டிய முதல்வர்!
மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த குருராஜ், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
கொரோனாவின் முதல் அலையின்போதே மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராக பணியாற்றிய இவர், மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது, மக்களுக்கு இலவசமாக காய்கறிகளை வழங்குவது உள்ளிட்ட சேவைகளை வழங்கிவந்தார்.
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், அவசர காலத்தேவைக்காக மக்கள் பயணிக்கும் வகையில் தனது ஆட்டோவை இலவச வாகனமாக மாற்றியுள்ளார்.
ஊரடங்கு நேரத்தில் பேருந்து வசதி இல்லாமல் தவித்துவரும் பயணிகளுக்கு தனது ஆட்டோவை இலவசமாக வழங்குகிறார் குருராஜ். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
மதுரையில் இளைஞர்கள் குருராஜும் அவரது நண்பர் அன்புநாதனும் #COVID19 தொற்றுக்காலத்தில் அரசின் அனுமதி பெற்று தங்கள் ஆட்டோவை இலவச சேவை வாகனமாக பயன்படுத்தி வருவதை அறிந்து நெகிழ்ந்தேன்.
இப்பெரும்போரில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அதிமுக்கியமானது! நாம் இணைந்து விரைவில் கொரோனாவை வெல்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் இளைஞர்கள் குருராஜும் அவரது நண்பர் அன்புநாதனும் #COVID19 தொற்றுக்காலத்தில் அரசின் அனுமதி பெற்று தங்கள் ஆட்டோவை இலவச சேவை வாகனமாக பயன்படுத்தி வருவதை அறிந்து நெகிழ்ந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 13, 2021
இப்பெரும்போரில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அதிமுக்கியமானது!
நாம் இணைந்து விரைவில் கொரோனாவை வெல்வோம் pic.twitter.com/xjXFKpqlD6