தயவு செய்து பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைகளை அனுப்புங்கள் - கெஞ்சிய SIயை பாராட்டிய முதலமைச்சர்
ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் வேண்டுகோள் விடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் முதலமைச்சர் பாராட்டி உள்ளார்.
கல்வி மீது காதல் கொண்ட SI
மதுரையைச் சேர்ந்தவர் பரமசிவம் 40 வயதாகவும் இவர் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ள்ள பென்னாலுார் பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வீடியோ சமூக வளைத்தலத்தில வைரலானது.
கல்வி மீது காதல் கொண்ட இவர் தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி எடுத்து கூறி வருகிறார்.
இவர் தற்போது பணியாற்றி வரும் பென்னாலுார் பேட்டை அருகே உள்ள திடீர் நகரில் சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பெற்றோர்களிடம் கெஞ்சல்
இவர்கள் காடுகளுக்கு சென்று விறகு வெட்டியும், தேன் எடுத்து விற்றும், அரிசி ஆலைகளில் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர்.
இதே தொழில்களில் தங்கள் குழந்தைகளையும் இவர்கள் ஈடுபடுத்தி வருகின்றனர். இதுபற்றி கேள்விபட்ட பயிற்சி உதவி ஆய்வாளர் பரமசிவம் அந்த பகுதிக்கு சென்று விசாரித்துள்ளார்.
அப்போது 11 குழுந்தைகள் பள்ளிக்கு செல்வதே இல்லை என்பதை அறிந்துள்ளார். பின்னர் குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயிறு வகைகள் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டதின் படி குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் பெற்றோர்கள் மீது வழக்கு தொடரலாம் எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.
வேண்டுமானால் அவர்களுடைய கல்வி செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு உதவ பென்னாலுார் பேட்டை காவல் நிலையம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம்.
யார் காலில் விழுந்தாவது உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறேன் உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன்.
குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு.
குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.
திருவள்ளூர் தாலுக்கா : தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் உதவி ஆய்வாளர் பரமசிவத்தின் விழிப்புணர்வு வீடியோ#Thiruvallur | #TNPolice pic.twitter.com/Xuu3YaSiju
— Tamil Diary (@TamildiaryIn) April 17, 2023