முதல்வர் பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.! என்ன பேசப் போகிறார்?
சென்னை தலைமை செயலகத்தில் 02:30 செய்தியாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் 02:30 செய்தியாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகளை முதல்வர் வெளிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகை வரை வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி எனவும் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் அதற்குப் பிறகு எந்த விதமான முக்கிய அறிவிப்பும் அரசால் வெளியிட முடியாது என்பதால் இன்று நகை கடன் தொடர்பான அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இந்நிலையில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்வர் என்ன பேசப் போகிறார் என்பதை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.