ஏன் முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை ? மத்திய இணை மந்திரி எல்.முருகன் கேள்வி

mkstalin lmurugan deepavali
By Irumporai Nov 04, 2021 07:33 PM GMT
Report

முதலமைச்சர் ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது மகிழ்ச்சி.

அது போல மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு வாட் வரியை குறைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும். அவர் சொன்னாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஏன் இதற்கு தயங்க வேண்டும். என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.