வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்தான் - போஸ்டரால் பரபரப்பு
வருங்கால முதலமைச்சர் நயினார் நாகேந்திரன் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் நயினார்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ளது. இதற்கிடையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
போஸ்டரால் பரபரப்பு
தொடர்ந்து பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா. எஸ். செல்வகுமார் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், "பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்றுள்ள 'வருங்கால முதல்வரே!' வாழ்த்துகிறேன்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இது அதிமுக-பாஜக கூட்டணி இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.