நலத்திட்ட உதவி; தர்மபுரிக்கு வருகை தரும் முதலமைச்சர்- முக ஸ்டாலின் அதிரடி !

M K Stalin Dharmapuri Salem Krishnagiri
By Swetha Mar 11, 2024 04:29 AM GMT
Report

 தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை தர்மபுரியில் நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்துகொள்கிறார்.

 முக ஸ்டாலின் 

தருமபுரி அரசு கல்லூரியில் அரங்கேறும் இந்த விழாவில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறித்த குறும்படம் திரையிடப்படுகிறது.

நலத்திட்ட உதவி; தர்மபுரிக்கு வருகை தரும் முதலமைச்சர்- முக ஸ்டாலின் அதிரடி ! | Chief Minister Mkstalin To Visit Dharmapuri Today

இதையடுத்து, அந்த மாவட்டங்களில் முடிவுபெற்ற 993 பணியாளர்களின் திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும், ரூ.560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு, முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த விழாவில் பேருரையாற்றுகிறார்.

பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் தாக்கு

பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் தாக்கு

நலத்திட்ட உதவி

இதை தொடர்ந்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நலத்திட்ட உதவி; தர்மபுரிக்கு வருகை தரும் முதலமைச்சர்- முக ஸ்டாலின் அதிரடி ! | Chief Minister Mkstalin To Visit Dharmapuri Today

இந்த சிறப்பு விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வைத்தியநாதன்,கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்கின்றனர்.