மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
மூன்று நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா வரும் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி செல்லும் அவர் நள்ளிரவு 12 மணியளவில் டெல்லி சென்றடைகிறார். நாளை பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசும் அவர் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோரி மனு அளிக்க உள்ளார்.
மேலும் தி.மு.க கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கிறார். இதையடுத்து ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா,நிதின் கட்காரி,நிர்மலா சீதாராமன்,ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.
நாளை மறுதினம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.
விழாவை முடித்துக்கொண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.