போதைப் பொருளை தடுக்க நடவடிக்கை - முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை

M K Stalin Government of Tamil Nadu
By Thahir 1 மாதம் முன்

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டகாவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது.

M K Stalin

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல் குறித்து 'ஆபரேஷன் கஞ்சா' என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் தொடர்ந்து போதைப் பொருட்கள் பிடிபட்டு வரும் நிலையில், இவற்றை முற்றிலும் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுப்பது, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தின் முடிவில் போதைப் பொருட்களுக்கான தடை உள்ளிட்டவை குறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.