மத மோதல்களை துாண்டுவோர் மீது கடும் நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!
மத மோதல்களை துாண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய அவர்,அதிமுக நிர்வாகிகள்,தொண்டர் உண்மைக்கு மாறான வழக்குகளும், அதிமுக தகவல் தொழிநுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் மீது தேவையில்லாமல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எதிரக்கட்சி தலைவர் கூறியதாக பேசினார்.
அப்படி முடிவு செய்து நாங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் செய்யக் கூடிய அவதுாறு,அநாகரிகங்களுக்கு தினமும் ஒரு வழக்கு போட வேண்டியிருக்கும்.
கருத்து சுதந்திரம் எல்லையை தாண்டும் போது உண்மையான வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்,மத மோதல்களை ஏற்படுத்துவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும்.
மத துவேசம் செய்பவர்களுக்கு தமிழ் மண்ணில் இடம் அளிக்க முடியாது.
அப்படி முயல்வோர் சட்டத்தின் தண்டனை அனுபவிக்க கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கும் என்றார்.