கொரோனா சிகிச்சைக்கு நன்கொடை வழங்க முதல்வர் வேண்டுகோள்!

tamilnadu mkstalin chiefminister
By Irumporai May 11, 2021 01:47 PM GMT
Report

கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. சிகிச்சையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், ரூ 10 லட்சத்திக்கு மேல் நிதி உதவி அளிக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிக்கை செய்தியாக வெளியிடப்படும் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு நன்கொடை வழங்க முதல்வர் வேண்டுகோள்! | Chief Minister Mk Stalin Request Donation