நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு

dmk neet cmstalin mktalin
By Irumporai Jan 08, 2022 07:42 AM GMT
Report

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனபதே அனைவரின் இலக்கு என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் :

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் பிரதமரை கடந்த ஜூன் 17ஆம் தேதி நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதேபோல தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களில் வலியுறுத்தினர்

இப்படிப்பட்ட நிலையில் நேற்று இரவில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவு கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

அப்படி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவர் ஒப்புதல் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஆனால் அந்த சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார்

ஒரு சட்டமன்றம் தனக்கிருக்கும் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் ஒரு சட்டத்தை நிறைவேற்றும் போது ஆளுநர் அதை மதித்து அதற்கு ஒப்புதல் அளிப்பது தான் மக்களாட்சியின் தத்துவம் நான் நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தியும் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பவில்லை

இதே மாநில உரிமையும் சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தையும் கேள்விக்குறியாகிறது எனவே இந்த சூழலை கருத்தில் கொண்டு தான் அவசரமாக அவசியத் உடன் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது 

தமிழக மாணவர்களின் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம் எனவும் கூறினார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

நீட் தேர்வு விவகராத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் எனவும் உறுதிபட கூறினார். நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மாணவர்கள் தவறான முடிவுகள் எடுப்பதை தடுக்க உளவியல் ரீதியான பயிற்சிகள் அளிக்க வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.