மக்களின் குறைகள் விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்..!
தமிழகத்தின் தலைமைச்செயலகத்தில் இன்று முதலமைச்சர் தலைமையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் போது, மக்களின் குறைகள் விரைவில் தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
காவல்துறை, வருவாய்த்துறை போன்ற துறை சார்ந்த மனுக்கள் மக்களிடம் இருந்து அதிகளவில் பெறப்படுவதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர், அரசின் சேவைகள் மக்களிடம் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் சென்று சேர வேண்டும்.
பெறப்படும் மனுக்களின் மீது தேவையற்ற அலைக்கழிப்பு இருக்கக்கூடாது, உரிய தீர்வுகள் காணப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பட்டா மேல்முறையீடுகள் தொடர்பாகவும் பெறப்படும் மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்.